/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.41 லட்சம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் மீது வழக்கு
/
ரூ.1.41 லட்சம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் மீது வழக்கு
ரூ.1.41 லட்சம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் மீது வழக்கு
ரூ.1.41 லட்சம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் மீது வழக்கு
ADDED : நவ 26, 2024 07:19 AM
கோவை; தடையில்லா சான்று வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய கணபதி தீயணைப்பு நிலைய அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை, கணபதி தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராக பணிபுரிந்து வருபவர் முத்துச்செல்வன்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம், தடையில்லா சான்று வழங்குவதற்காக, முத்து செல்வன் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார், நேற்று மாலை, கணபதி தீயணைப்பு நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், தடையில்லா சான்று வழங்குவதற்காக, லஞ்சமாக பெறப்பட்ட, 1,41,500 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்தனர்.