/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகள் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள் இருப்பு வைப்பு
/
கால்நடைகள் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள் இருப்பு வைப்பு
கால்நடைகள் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள் இருப்பு வைப்பு
கால்நடைகள் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள் இருப்பு வைப்பு
ADDED : நவ 27, 2025 01:48 AM
பொள்ளாச்சி: பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கிடாரி கன்றுகளை உருவாக்க, ஒவ்வொரு கால்நடை மருந்தகங்களிலும் உறை விந்து ஊசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கால்நடைத்துறை சார்பில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள் வாயிலாக செயற்கை முறை கருவூட்டல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் கிடாரி கன்றுகளை அதிகமாக ஈன்று, பசு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மரபணு திறன் கொண்ட ஊசி செலுத்தப்படுகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில், பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள், அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உறை விந்து ஊசி ஏற்கனவே கறவை மாடுகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், கால்நடை வளர்ப்போர், இதனை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறையினர் கூறியதாவது:
கிடாரி கன்றுகளை ஈனும் வகையில், பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து ஊசிகள், பயன்படுத்தப்படுகிறது. மாவட்டந்தோறும், ஒவ்வொரு கட்டமாக இதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி கோட்டத்தில், முழுவீச்சில், கால்நடைகளில் செயற்கை கருவூட்டல் செய்யப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள், கிடாரி கன்றுகளை ஈன்று எடுக்கவே விருப்பம் தெரிவிக்கின்றனர்.
அதற்கென, ஊட்டியில் உள்ள விந்து சேமிப்பு பராமரிப்பு மையத்தில் இருந்து, கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்களுக்கு உறை விந்து ஊசிகள் தருவிக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஜெர்சி, ஜெர்சி கிராஸ் என, உறை விந்து ஊசிகள் உள்ள நிலையில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

