/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் காவேரி வாட்டர் டேங்குகள்
/
நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் காவேரி வாட்டர் டேங்குகள்
நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் காவேரி வாட்டர் டேங்குகள்
நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் காவேரி வாட்டர் டேங்குகள்
ADDED : செப் 30, 2025 10:41 PM

கோ வையில் நவீன தொழில் நுட்பத்துடன் காவேரி வாட்டர் டேங்குகள் தயாரிக்கப்பட்டு வருவதாக காவேரி குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் வினோத் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள காவேரி நிறுவனமானது 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கோவையில் எங்களது நிறுவனத்தை நிறுவிய கல்யாண் சிங் ரத்தோர் விடா முயற்சியினால், 1972-ம் ஆண்டு சிமென்ட் பைப் உற்பத்தியை ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழுடன் உற்பத்தி செய்த முதல் நிறுவனமாகும். 2001ம் ஆண்டு முதல் சிமென்ட் பைப்பின் உபயோகம் குறைந்ததை அடுத்து பி.வி.சி., யூ.பி.வி.சி., பைப்புகளை காவேரி பிராண்டில் அறிமுகம் செய்தோம். பி.வி.சி பைப் அரை இன்ச் முதல் 8 இன்ச் வரை உற்பத்தி செய்கின்றோம்.
2015ம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் முறையாக 7 வண்ணங்களில் வாட்டர் டேங்குகளை அறிமுகம் செய்தோம். அதன் படி 200 லிட்டர் முதல் 5 ஆயிரம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட டேங்குகளை தயாரித்து வருகிறோம். மேலும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 லேயர், 3 லேயர், 5 லேயர் டேங்குகளை 8 வண்ணங்களில் தயாரித்து வருகிறோம்.
டேங்கிற்கு 10 ஆண்டுகள் உத்திரவாதத்தையும் சிறந்த சேவையினையும் அளிக்கின்றோம். காவேரியின் புதிய அறிமுகமான 5 லேயர் அத்திக்கடல் வாட்டர் டேங்குகள், 8 வண்ணங்களில், 500 லி முதல் 10,000 லிட்டர் வரை விற்பனை செய்யப்படுகிறது.
2017 ஆண்டு முதல் வளையும் தன்மை கொண்ட எலெக்ட்ரிக்கல் பைப்புகளையும், அதன் பெண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். பி.வி.சி.பைப், எலெக்ட்ரிக்கல் பைப் என வீட்டு உபயோகத்திற்கு தேவையான அனைத்து வித பொருட்களையும் தயாரிக்கிறோம்.
50 ஆண்டுகளாக எங்களது கொள்கை உயர் தரம், சரியான விலை. அனைத்து பொருட்களுக்கும் உத்திரவாதம், சிறந்த சேவை,வாடிக்கையாளர் திருப்திஆகியவற்றை மட்டுமே இலக்காக வைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.