/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'
/
எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'
எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'
எட்டு பவுன் நகை திருட்டு : காட்டிக்கொடுத்தது 'சிசிடிவி'
ADDED : நவ 11, 2025 10:53 PM
கோவை: போத்தனூர், சீனிவாசா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மரகதம், 56. இவர் வீட்டின் முதல் மாடியில் கடந்த நான்கு ஆண்டுகளாக, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அழகுராஜா, 38 தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கீழ் தளத்தில் உள்ள மரகதம் வீட்டில் பீரோவில் வைத்திருந்த எட்டு பவுன் தங்க நகை மாயமானது.
நகை மாயமானது முதல் அழகுராஜாவும் மாயமானார். சந்தேகமடைந்த மரகதம், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், மரகதம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நேரம், வீட்டில் புகுந்த அழகுராஜா நகை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மரகதம் சுந்தராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அழகுராஜாவை தேடி வருகின்றனர்.