/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ. டிவிஷன் போட்டிகள்; விக்கெட்களை குவிக்கும் வீரர்கள்
/
சி.டி.சி.ஏ. டிவிஷன் போட்டிகள்; விக்கெட்களை குவிக்கும் வீரர்கள்
சி.டி.சி.ஏ. டிவிஷன் போட்டிகள்; விக்கெட்களை குவிக்கும் வீரர்கள்
சி.டி.சி.ஏ. டிவிஷன் போட்டிகள்; விக்கெட்களை குவிக்கும் வீரர்கள்
ADDED : அக் 02, 2025 12:48 AM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் முதலாவது டிவிஷன் போட்டி சூர்யபாலா, பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமியும், சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 183 ரன் எடுத்தனர். வீரர்கள் சந்தோஷ், 51 ரன், சச்சின், 37 ரன், பொன்முரளி கிருஷ்ணன், 36 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சிகாப்தீன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியினர், 38.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 186 ரன் எடுத்தனர். வீரர் சுரேஷ் குமார், 60 ரன், யுவராஜ், 54 ரன் எடுத்தனர்.
ஐந்தாவது டிவிஷன் போட்டியில் அக்சயா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
அக்சயா கல்லுாரி அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 158 ரன் எடுத்தனர். வீரர்கள் தமிழ்மணி, 34 ரன், அரவிந்த், 37 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சாஹித் ரசீன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
சீஹாக்ஸ் அணியினர், 21.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 160 ரன் எடுத்தனர். வீரர் ஜெரிஸ் - 90 ரன், ஹர்ஹித் - 51 ரன் எடுத்தனர். ஆறாவது டிவிஷன் போட்டியில், ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் அணியும், கோவை புளூ நைட்ஸ் அணியும் மோதின.
ஏ.எஸ்.பி., அணியினர், 39.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 138 ரன் எடுத்தனர். வீரர்கள் லோகேஸ்வரன், அருண்பாண்டி ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
கோவை புளூ நைட்ஸ் அணியினர், 38.2 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 139 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.