/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பாரதியை ஒருநாள் மட்டும் கொண்டாடினால் போதாது'
/
'பாரதியை ஒருநாள் மட்டும் கொண்டாடினால் போதாது'
ADDED : டிச 25, 2025 05:16 AM

கோவை: பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாரதி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி இந்திய மேலாண்மைக் கழக பட்ட ஆய்வாளர் வீரபாலாஜி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''பாரதியை இன்று ஒரு நாள் மட்டும் கொண்டாடினால் போதாது. அவரது பாடல்களை படித்து, மாணவர்கள் தங்களுடைய ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
15 பள்ளிகளுக்கு இடையே நடந்த, பல்வேறு போட்டிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஏறத்தாழ 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற ஜி.வி.கே. வித்யா மந்திர், இந்த ஆண்டுக்கான பாரதி விழா கலைப் போட்டிகளின் ஒட்டுமொத்த சுழற் கோப்பையைத் தட்டிச் சென்றது. பள்ளியின் முதன்மை நிர்வாக அதிகாரி சித்தார்த் சீனிவாசன், தாளாளர் கல்பனா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதுகலை தமிழாசிரியர் ஷாஜஹான், ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

