ADDED : அக் 28, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, சேத்துமடை குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகன்யா தலைமை வகித்தார். உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு தோசை, கேப்பை கூழ், கம்பங்கூழ், எள்ளு மிட்டாய், பால் கொழுக்கட்டை, சிறுதானிய கூழ், காய்கறி உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், துரித உணவின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் பாரம்பரிய உணவுகளை உட்கொண்டனர்.