UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 04:52 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கேரளா சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி கேரளா சமாஜத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சமாஜம் தலைவர் சோமன் மேத்யூ தலைமை வகித்தார். டிரஸ்ட் சேர்மன் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். துணைத் தலைவர்கள் ராமன், சுரேஷ்குமார் மற்றும் ெஷஜில் ஆகியோர் விழாவை துவக்கி வைத்து பேசினர்.
துணைச் செயலாளர் சாஜூ ஜான், அத்தப்பூ போல போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமாஜ உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
