sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி


ADDED : ஜன 08, 2024 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2024 10:57 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடப்பதால், பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக செயல்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சமூகத் தரவு கணக்கெடுப்பு பணி நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது முழு விபரங்களையும், சமூக தரவு கணக்கெடுப்பு பணிக்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக சமூக தரவு கணக்கெடுப்பு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு பயிற்றுநர் மற்றும் சமூக வள வல்லுனர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வைத்துள்ளவர்கள், இதுவரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாதவர்கள், தங்களது இருப்பிடங்களுக்கு வரும் கணக்கெடுப்பு பணியாளர்களிடம் முழு விபரங்களையும், எவ்வித தயக்கமும் இன்றி தெரிவிக்க வேண்டும். இதன் வாயிலாக, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், அரசால் நடத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து, மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம் என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us