sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காளப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

/

 காளப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

 காளப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

 காளப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா


ADDED : மார் 03, 2026 06:12 AM

Google News

ADDED : மார் 03, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி: காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா, விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காளப்பநாயக்கன்பாளை யத்தில், 1925ம் ஆண்டு அரசு நடுநிலைப்பள்ளி துவங்கப்பட்டது.

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நினைவு கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் நினைவு கட்டடங்கள் கட்டித்தந்த அனன்யா குழுமத்திற்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் தலைமையாசிரியருமான ராமலிங்கம் தலைமை வகித்தார். தற்போதைய தலைமையாசிரியர் சுகுணா வரவேற்றார்.

கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, நூற்றாண்டு நினைவு கட்டடங்களை திறந்து வைத்தனர். நூற்றாண்டு மலரை வெளியிட்டனர்.

நூற்றாண்டு நினைவு வகுப்பறை கட்டடத்தை, 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டிக்கொடுத்த அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரியை, கலெக்டர் பாராட்டி கவுரவித்தார்.

முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us