/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாற்றாண்டு நினைவு மணி மண்டபம் திறப்பு விழா
/
நுாற்றாண்டு நினைவு மணி மண்டபம் திறப்பு விழா
ADDED : அக் 14, 2025 10:35 PM

கோவை; துடியலுார் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பில், குமாரசாமி கவுண்டர் நுாற்றாண்டு நினைவு மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:
குமாரசாமியால் 2010ல் துடியலுார் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளை துவக்கப்பட்டது. அவர் மறைவுக்குப்பின், 2012 முதல் 13 ஆண்டுகளில் 6000க்கும் மேற்பட்டவர்களுக்கு, கல்வி, மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குமாரசாமியின் நுாற்றாண்டு முன்னிட்டு, மணி மண்டபம் அமைக்கப்பட்டு, ஐம்பொன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
துாய்மைப்பணியாளர்கள் 130 பேருக்கு தீபாவளி புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது. அறக்கட்டளை உபதலைவர் சங்கர் வாணவராயர், செயலாளர் சண்முகம், பொருளாளர் சுந்தரம், அறங்காவலர்கள் மனோமன்றாடியார், டாக்டர்கள் சேதுபதி, சந்திரலேகா, மோகன்குமார், ஜெயகுமாரி, லலிதா மற்றும் ஸ்ரீ கணபதி மார்ட் நிர்வாக இயக்குனர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.