/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய வேளாண் திட்ட முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
/
மத்திய வேளாண் திட்ட முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
மத்திய வேளாண் திட்ட முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
மத்திய வேளாண் திட்ட முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 29, 2025 11:51 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் மூன்று இடங்களில் நடக்கும் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் மே 29 முதல் ஜூன், 12 வரை நடக்கிறது. காரீப் பருவத்தில் விவசாயிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விவசாய தொழில்நுட்பங்கள், பயிர் செய்ய வேண்டிய புதிய பயிர் ரகங்கள், வானிலை தகவல்கள் ஆகியவை முகாமில் வழங்கப்படுகின்றன.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த சந்தேகங்களை விவசாயிகள் கேட்டு அறியலாம். முகாமில், விவசாய ட்ரோன்களின் நேரடி செயல் விளக்கம், பயிர் பல்வகை படுத்துதல் மற்றும் இயந்திர அடிப்படையிலான விவசாயத்தின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பன்னிமடை தர்மராஜா கோவில் வளாகம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் மற்றும் ஒன்னிபாளையம் ஆகிய இடங்களில் இன்று காலை, 10:00 மணிக்கு முகாம் நடக்கிறது.