/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும்'
/
'மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும்'
'மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும்'
'மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும்'
ADDED : டிச 31, 2025 05:14 AM

சூலூர்: தகவல் ஒலிபரப்பு துறையின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி துவக்க விழா, சூலூரில் நேற்று நடந்தது.
கண்காட்சியின் நோக்கம் குறித்து, சென்னை மத்திய தகவல் தொடர்பகத்தின் உதவி இயக்குனர் பால நாகேந்திரன் பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு, விபத்து காப்பீடு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், தொழில் துவங்க ஜமுத்ரா கடன், பயிர் காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டம் என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களால், விண்வெளி, ரயில்வே, அணுசக்தி, சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளன.
எதிர்கால சமுதாயத்தை கணக்கில் கொண்டு செயல்படுத்தும் திட்டங்களால், இந்தியா வல்லரசாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
புதுச்சேரி கள விளம்பர அலுவலர் சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், இந்திய தர நிர்ணய அமைவன விஞ்ஞானி மற்றும் இயக்குனரான வினித் குமார், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திருமால் ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
தொழில்நுட்ப உதவியாளர் சந்திர சேகர், தியாகராஜன் ஆகியோர் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர். கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

