sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவை வளர மத்திய அரசு உதவும் மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் உறுதி

/

 கோவை வளர மத்திய அரசு உதவும் மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் உறுதி

 கோவை வளர மத்திய அரசு உதவும் மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் உறுதி

 கோவை வளர மத்திய அரசு உதவும் மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் உறுதி


ADDED : பிப் 27, 2026 06:51 AM

Google News

ADDED : பிப் 27, 2026 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, பிப்.27--

''கோவை தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்,'' என, மத்திய எம்.எஸ்.எம். இ., அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேசினார்.

கோவை கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் மத்திய எம்.எஸ்.எம்.இ., அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியுடன் தொழில்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசுகையில், ''தொழில் நிறுவனங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மட்டுமே கடன் உதவிகள் கிடைக்கின்றன. குறுந்தொழில்களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தில் மூன்று கோடி வரை பிணையில்லா கடன் வழங்க வேண்டும். கோவைக்கு 2018ல் தொழில்நுட்ப மையம் அமைக்க அனுமதி கிடைத்தது. இது தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த தொழில்நுட்ப கருவிகள் மையம் விரைவில் அமைந்தால் கோவை தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், எம்.எஸ்.எம். இ., மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேசுகையில், ''சிறு, குறு, நடுத்தர தொழில்கள், நம் நாட்டின் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும். பிற அரசுத்துறைகளில் உதவி தேவைப்பட்டாலும் அவற்றைப் பெற்றுத் தர உதவும். அடுத்த மாதம் நடக்கும் பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, கோவை தொழில் நிறுவனங்கள் அளித்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு துறைகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். கோவையின் வளர்ச்சி வியத்தகு அளவிற்கு வளர்ந்துள்ளது,'' என்றார்.

நிகழ்ச்சியில், கொடிசியாவின் எம்.எஸ்.எம். இ., கையேடு, கோவை தொழில் நிறுவனங்களின் டேட்டா பேஸ் புத்தகங்களை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி வெளியிட்டார். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

அடல் இன்குபேஷன், ராணுவ புதுமை படைப்பு மையத்தின் தலைவர் சுந்தரம், கோவையில் தயாராகும் ராணுவ தளவாட உற்பத்தி பொருட்கள், புதுமை கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கினார்.

கொடிசியா கவுரவ தலைவர் யுவராஜ் நன்றி கூறினார்.

பல்வேறு தொழில் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை அளித்தனர்.






      Dinamalar
      Follow us