ADDED : செப் 04, 2026 09:33 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் சிறுசேமிப்பு திட்டத்தில் அதிக வசூல் சாதனை புரிந்த நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் 2025–26ல் அதிக வசூல் சாதனை புரிந்த 24 நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பவன்குமார் வழங்கினார். மண்டல உதவி இயக்குனர் (சிறுசேமிப்பு) பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலக சிக்கன நாளை முன்னிட்டு பள்ளி அளவில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் சிறுசேமிப்பு குறித்த சொற்றொடர் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற, 12 மாணவர்களுக்கும் கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
