/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்றல் அடைவுக்கான சவாலில் வென்ற பள்ளிகளுக்கு சான்றிதழ்
/
கற்றல் அடைவுக்கான சவாலில் வென்ற பள்ளிகளுக்கு சான்றிதழ்
கற்றல் அடைவுக்கான சவாலில் வென்ற பள்ளிகளுக்கு சான்றிதழ்
கற்றல் அடைவுக்கான சவாலில் வென்ற பள்ளிகளுக்கு சான்றிதழ்
ADDED : ஜூலை 08, 2025 08:47 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி பள்ளி, கற்றல் அடைவுக்கான, 100 நாள் சவாலில் வெற்றி பெற்றதற்காக, பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழ், ஆங்கிலம், வாசித்தல் மற்றும் கணித அடிப்படை செயல்கள் குறித்து கற்றல் அடைவுக்கான, 100 நாள் சவால், அரசுப்பள்ளிகளில் நடைபெற்றன.
அதில், வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. அமைச்சர்கள் மகேஷ், நேரு ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாராட்டு சான்றிதழை பெற்றது. விருது பெற்ற பள்ளிக்கு தொடக்க மாவட்ட கல்வி அலுவலர் தங்கராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் வெள்ளிங்கிரி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கற்றல் அடைவுக்கான, 100 நாள் சவால் நடத்தப்பட்டது. அதில், கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி, சந்தேகவுண்டன்பாளையம், நெகமம், பொன்னாயூர், ராமநாதபுரம், தாவளம் உள்ளிட்ட, 36 பள்ளிகள், பாராட்டுச்சான்றிதழ்களை பெற்றன,' என்றனர்.
வால்பாறை
வால்பாறை நகர், உருளிக்கல், கவர்க்கல், அக்காமலை, நல்லமுடி ஆகிய ஐந்து துவக்கப்பள்ளிகள், கற்றல் அடைவுக்கான, 100 நாள் சவாலில் வெற்றி பெற்றன.
பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.
மாவட்ட கல்வி அலுவலர், வால்பாறை வட்டார கல்வி அலுவலர் (பொ) சின்னப்பராஜ், பொள்ளாச்சி வடக்கு வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.