/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு சான்றிதழ்
/
உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு சான்றிதழ்
ADDED : டிச 23, 2024 04:48 AM
சூலுார் : உயிர்ம வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என, விதைச்சான்று துறை அலுவலர் கூறினார்.
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், பங்களிப்பு உத்திரவாத திட்டத்தின் கீழ், சூலூர் அடுத்த ராசிபாளையம் கிராமத்தில், 20 விவசாயிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு pgsindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு விவசாயிகள், உயிர்ம வேளாண்மை செய்து வருகின்றனர். விதைச்சான்று அலுவலர் ஹேமா, உதவி வேளாண் அலுவலர் சந்தோஷ் ஆகியோர் ராசிபாளையத்தில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனைகளும், ஊக்கமும் அளித்தனர்.
அலுவலர் ஹேமா கூறுகையில், ''உயிர்ம வேளாண்மை செய்யும் ராசிபாளையம் விவசாயிகள் குழுவுக்கு, பங்களிப்பு உத்திரவாத திட்ட சான்றிதழ் (பி.ஜி.எஸ்., இந்தியா கிரீன்) வழங்கப்பட உள்ளது. அந்த சான்றிதழ் பெற்ற விவசாயிகள், உள்ளூர் சந்தைகளில் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி நல்ல லாபம் பெறலாம்,'' என்றார்.

