/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; இரண்டு பெண்கள் கைது
/
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; இரண்டு பெண்கள் கைது
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; இரண்டு பெண்கள் கைது
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; இரண்டு பெண்கள் கைது
ADDED : பிப் 09, 2025 12:32 AM

கோவை : பஸ்சில் மூதாட்டிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன், மதுக்கரை சேர்ந்த ஆய்ஷம்மாள், 75 பஸ்சில் டவுன் ஹால் வந்த போது அவர் அணிந்திருந்த 5 சவரன் நகை திருட்டு போனது. இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த வசந்தா, 75 பஸ்சில் காந்திபுரம் நோக்கி வந்த போது அவரின் 6 சவரன் செயின் திருட்டு போனது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும், திருடர்களை பிடிக்க போலீசார் கடைவீதி பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மூதாட்டிகளிடம் இருந்து நகைகளை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 11 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த நந்தினி, 28, காளீஸ்வரி, 28 என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் குடும்பமாக சேர்ந்து திருவிழாக்கள், பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், நகை பறிக்கும் பணத்தில் சொந்த ஊரில் வீடு கட்டி சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் பேரூர் கோவில் கும்பாபிஷேக விழா ஓரிரு நாட்களில் நடக்கவுள்ளதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்ட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.