/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட்: கோவை பிரதர்ஸ் அணிக்கு சாம்பியன்ஷிப்!
/
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட்: கோவை பிரதர்ஸ் அணிக்கு சாம்பியன்ஷிப்!
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட்: கோவை பிரதர்ஸ் அணிக்கு சாம்பியன்ஷிப்!
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட்: கோவை பிரதர்ஸ் அணிக்கு சாம்பியன்ஷிப்!
ADDED : மே 02, 2025 09:24 PM

'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் இறுதிப் போட்டியில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவை பிரதர்ஸ் அணி, டிராபியை தட்டிச் சென்றது; இரண்டாம் பரிசை கே.ஏ.டி., டர்ப் அணி வென்றது.
தினமலர் நாளிதழ் சார்பில், 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்', 'ஸ்காலர்ஸ் சொல்யூஷன்ஸ்', 'ஓ.கே., ஸ்வீட்ஸ்' பங்களிப்புடன், 11 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கான 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி, கடந்த ஏப்., 28ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.
டென்னிஸ் பந்து கொண்டு, 'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், மாவட்டத்தை சேர்ந்த, 32 அணிகள் பங்கேற்றன.
அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி, சரவணம்பட்டி சங்கரா கல்லுாரி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானங்களில், போட்டிகள் நடந்தன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இறுதிப் போட்டியும், மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டிகளும், சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், வூல்ப் பேக் அணியும், நோ-11 அணியும் மோதின.
டாஸ் வென்ற நோ-11 அணியினர் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தனர். வூல்ப் பேக் அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 47 ரன்கள் எடுத்தனர்.
48 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய நோ-11 அணியினர், 4.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 49 ரன்கள் எடுத்து மூன்றாம் பரிசை தட்டினர்.
இதில், அதிகபட்சமாக, 25 ரன்கள் எடுத்த வீரர் அபிஷேக்பாபு ஆட்ட நாயகன் விருதை வென்றார். பரபரப்பான இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த கே.ஏ.டி., டர்ப் அணியும், கோவை பிரதர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கே.ஏ.டி., டர்ப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, 10 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 81 ரன்கள் எடுத்தது கே.ஏ.டி., டர்ப் அணி வீரர் அகிலாண்டீஸ்வரன் அதிகபட்சமாக, 25 ரன்கள் குவித்தார். 82 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய கோவை பிரதர்ஸ் அணியினர், துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், 7.1 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 82 ரன்கள் எடுத்து, கோவை பிரதர்ஸ் அணி முதல் பரிசை வென்றது. அணி வீரர் சுதீந்திரன் அதிகபட்சமாக, 36 ரன்கள் விளாசியதுடன், ஒரு விக்கெட்டும் வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நாங்க ஜெயிச்சிட்டோம்!
பரபரப்பான இறுதிப்போட்டியில், இரு அணி வீரர்களும் திறமையில் சளைத்தவர்கள் அல்ல என்பதை, தங்கள் ஆட்டத்தில் வெளிப்படுத்தினர். சிக்சர் மழையால் ரசிகர்களையும், சக வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.
முடிவில் வெற்றி பெற்ற அணியினர், 'நாங்க ஜெயிச்சிட்டோம்... நாங்க ஜெயிச்சிட்டோம்...' என உற்சாக குரல் எழுப்பியபடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.