UPDATED : ஆக 11, 2026 07:32 PM
ADDED : ஆக 11, 2026 06:53 PM
சூலூர்: சூலூர் வடக்கு மின் பகிர்மான நுகர்வோர்களின் மின் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மின் பகிர்மான வட்டம் ஒண்டிப்புதூர் கோட்ட செயற்பொறியாளர் பிந்து அறிக்கை :
ஒண்டிப்புதூர் கோட்டம், சூலூர் உபகோட்டத்துக்கு உட்பட்ட சூலூர் வடக்கு பிரிவு மின் நுகர்வோர்களின் மின் கணக்கீடு ஒற்றைப்டை மாத முறையில் இதுவரை கணக்கெடுக்கப் பட்டது. நிர்வாக காரணங்களுக்காக, இனிமேல் இரட்டைப் படை மாத முறைக்கு மாற்றப்பட உள்ளது.
அதனால், சூலூர் வடக்கு மின் நுகர்வோர்கள், ஜூலை மாத கணக்கீட்டு தொகையை உரிய காலத்தில் செலுத்த வேண்டுகிறோம். ஆக., மாதத்திலும் கணக்கீடு செய்ய உள்ளதால், அந்த தொகையையும் உரிய காலத்துக்குள் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம். இனி இரட்டைப் படை மாத முறையில் கணக்கீட்டுக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
