ADDED : செப் 05, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
கோவை: ஈரோடு – திருப்பூர் ரயில் வழித்தடத்தில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன. இதனால், திருச்சியில் இருந்து இன்றும், 11, 12ம் தேதிகளிலும் மதியம் 1:00க்கு புறப்படும் பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில்(16843) ஈங்கூர் ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின் பாலக்காடு ஸ்டேஷனுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
இந்த ரயில் பீளமேடு, வடகோவை, கோவை வழியாக இல்லாமல், இருகூர், போத்தனுார் வழித்தடங்களிலும் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
