/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாகை - கோவை ரயில் வழித்தடம் மாற்றம்
/
நாகை - கோவை ரயில் வழித்தடம் மாற்றம்
ADDED : அக் 08, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : திண்டுக்கல் ரயில்வே யார்டில், இன்ஜினியரிங் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாகர்கோவில்- கோவை ரயில், வரும் 10ம் தேதி மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவில்-கோவை ரயில் இரு மார்க்கங்களிலும் (எண்: 16321 மற்றும் 16322), விருதுநகர், கரூர் வழியாக இயக்கப்படும். மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.
திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாதுரை, திண்டுக்கல், ஈரோடு, பாளையம் வழியே இயக்கப்படாது.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.