தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடம் மாற்றணும்! யானைகள் புத்துணர்வு முகாமை அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

இடம் மாற்றணும்! யானைகள் புத்துணர்வு முகாமை அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

இடம் மாற்றணும்! யானைகள் புத்துணர்வு முகாமை அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை


UPDATED : செப் 14, 2026 07:50 PM

ADDED : செப் 14, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 07:50 PM ADDED : செப் 14, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: காட்டு யானைகள் அடிக்கடி வர வாய்ப்பளிக்கும் என்பதால், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே நடைபெற உள்ள, கோவில் யானைகள் புத்துணர்வு முகாமை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்பகுதியில் முகாம் அமைத்தால், விவசாய பயிர்கள் சேதம் அடைவதோடு, யானைகள் - மனித மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் பவானி நிதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் டி.டி.அரங்கசாமி, தமிழக வனத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

முகாம் நடைபெறும் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆறு ஓடுகிறது. சுற்றுப்பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

இப்பகுதியில் கடந்த காலங்களில் யானைகள் முகாம் நடந்த போது, வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள், முகாம் பகுதிக்கு வந்தும், அருகே உள்ள நெல்லிமலையிலும் நிரந்தரமாக தங்கி இருந்தன. முகாம் நாட்களில் காட்டு யானைகள் முகாமுக்குள் வர முயற்சி செய்தன. வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து, யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

நெல்லிமலை பகுதியில் தங்கிய யானைகள், இரவில் சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதம் செய்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்பகுதியில் கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறவில்லை. அதனால் நெல்லி மலைப்பகுதியிலும், நெல்லித்துறையிலும் யானைகளின் நடமாட்டம் குறைந்துள்ளது.

தற்போது மீண்டும் இதே பகுதியில், கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தினால், காட்டு யானைகள் மீண்டும், நெல்லிமலை பகுதிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் யானைகள் - மனித முரண்பாடுகளும், பயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளன.

எனவே, தமிழக அரசு கோவில் யானைகளுக்கு நடத்தக்கூடிய புத்துணர்வு முகாமை, வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us