/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய கல்வியாண்டில் பிளஸ் 2 தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றம்
/
புதிய கல்வியாண்டில் பிளஸ் 2 தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றம்
புதிய கல்வியாண்டில் பிளஸ் 2 தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றம்
புதிய கல்வியாண்டில் பிளஸ் 2 தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றம்
ADDED : மே 04, 2025 10:59 PM
கோவை, ;நடப்பு 2025 --- 2026 கல்வியாண்டில், தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தமிழ் பாடத்திட்டத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தற்போது 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், புதிய கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறிவதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பாடங்கள் மிக அதிகமாக உள்ளன. எனவே, அவற்றை குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம், பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், சில பாடங்களில் பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டன.
மாநில பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பாடப்பகுதிகள் கடினமாக உள்ளன. அவற்றில் சில பகுதிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தும் அது நிறைவேறவில்லை.
இதன் காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயிரியல் மற்றும் கணிதம் போன்ற பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. தற்போதைய பாடப்பகுதிகளில் சில பகுதிகளை நீக்கினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.