/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி பலாத்கார வழக்கில் 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
/
மாணவி பலாத்கார வழக்கில் 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
மாணவி பலாத்கார வழக்கில் 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
மாணவி பலாத்கார வழக்கில் 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
ADDED : ஜன 30, 2026 05:03 AM
கோவை : கோவை ஏர்போர்ட் பின்புறம், நவம்பர் 2ம் தேதி நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து தலைமறைவாகினர்.
தேடலுக்கு பின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சதீஷ்,30, அவரது தம்பி கார்த்திக்,21, மதுரை கருப்பாயூரணி குணா,20, ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மூவரும், கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூவர் மீதும் கோவை மகளிர் கோர்ட்டில், 270 பக்கம் கொண்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி, காயப்படுத்தல், கூட்டு சதி, தடயங்கள் மறைத்தல் உள்ளிட்ட 15 பி.என்.எஸ். சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.