/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாங்கும் பொருட்களின் தரம் காலாவதி தேதியை பாருங்க!
/
வாங்கும் பொருட்களின் தரம் காலாவதி தேதியை பாருங்க!
ADDED : நவ 29, 2024 11:21 PM

பொள்ளாச்சி: 'கடைகளில் பொருட்கள் வாங்கும் போது தரமாக உள்ளதா; காலவாதியாகி விட்டதா என கவனித்து வாங்க வேண்டும்,' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சப் - கலெக்டர் அறிவுறுத்தினார்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜீவரேகா முன்னிலை வகித்தார்.
சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள், கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போது, தரத்தை பார்த்து வாங்க வேண்டும்.ஒரு பொருளை வாங்கும் போது, காலவாதியாகி விட்டதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, அவர் பேரணியை துவக்கி வைத்தார். மாக்கினாம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று, விழிப்புணர்வு பதாகைகளுடன், காந்தி சிலை, தாலுகா அலுவலக ரோடு, தபால் அலுவலக ரோடு வழியாக மீண்டும் சப் - கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர்.
அதில், குடிமைப்பொருள் தனி தாசில்தார் சங்கீதா, பொள்ளாச்சி நுகர்வோர் சங்க தலைவர் இந்திராணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.