/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் இன்று மிக கன மழை எச்சரிக்கை
/
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் இன்று மிக கன மழை எச்சரிக்கை
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் இன்று மிக கன மழை எச்சரிக்கை
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் இன்று மிக கன மழை எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2024 05:58 AM

சென்னை : செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு, இன்று மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிக கன மழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' விடப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில், இன்று கன மழை பெய்யும். திருவள்ளூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும்.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், 9ம் தேதி கன மழை பெய்யும். தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 10ம் தேதி கன மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. மாஞ்சோலை 9; ஒட்டப்பிடாரம் 5; கோவில்பட்டி 4; மணியாச்சி, மணிமுத்தாறு, வீரபாண்டி 3; சேர்வலாறு அணை, அம்பாசமுத்திரம் 2; தென்காசி, குன்னுார், கடனா நதி, ராமநதி அணை, கொடைக்கானல், போடி, மேட்டுப்பாளையம் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.