/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை போத்தனுார் சிறப்பு ரயில்
/
சென்னை போத்தனுார் சிறப்பு ரயில்
ADDED : செப் 16, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சென்னை சென்ட்ரல் - போத்தனுார் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - போத்தனுார்(06123) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 25 முதல் அக். 23ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேரும்.போத்தனுார் - சென்னை சென்ட்ரல்(06124) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 26 முதல் அக். 24ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.