/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் இல்லை
/
முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் இல்லை
முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் இல்லை
முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் இல்லை
ADDED : நவ 06, 2024 03:13 AM

கோவை; கோவை விளாங்குறிச்சி 'எல்காட்' வளாகத்தில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வழக்கமாக நிகழ்ச்சி துவங்கும் முன், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை. அதேபோல், நிகழ்ச்சி முடிந்ததும் தேசியகீதமும் இசைக்கப்படவில்லை.
தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நடத்திய நில எடுப்பு விடுவிப்பு ஆணைகளை வழங்கிய நிகழ்ச்சி கோவை அவினாசி ரோட்டிலுள்ள சுகுணா மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ஆணைகளை வழங்கினார். இவ்விழாவிலும், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.
சமீபமாக நடந்த நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சர்ச்சை எழுந்ததால், கோவை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது தவிர்க்கபட்டதாக கூறப்படுகிறது.