/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
/
ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ADDED : செப் 18, 2025 10:39 PM

கோவை; கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை, உடல் உறுப்பு தான விழிப்புணர்வு செயல்பாடாக, 45,861 மக்களிடம் இருந்து உடல் உறுப்பு தான உறுதிமொழி பெற்றுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
2023 செப். முதல், மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்த நபர்களின் உடலுக்கு இறுதி சடங்கில் அரசு மரியாதை அளிக்கப்படும் என அறிவித்தது.
தமிழக அரசின் இத்திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தேசிய அளவில் விழிப்புணர்வு திட்ட முயற்சியை துவக்கியது.
அதன்படி, 2025 பிப். முதல் ஏப். வரை 45,861 பேரிடம் உடல் உறுப்பு தான உறுதிமொழியை பெற்று சாதனை படைத்துள்ளது. இதை கவுரவிக்கும் விதமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனை நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.