/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
/
முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ADDED : ஆக 11, 2025 06:50 AM

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற் பளித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானத்தில், விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில், அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன், சக்கரபாணி, ராஜா, கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், மேயர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து, ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு, வழி நெடுகிலும், தி.மு.கவினர் திரண்டு நின்று, மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர். சாலை மார்க்கமாக உடுமலை சென்றார். நேற்றிரவு 8:00 மணியளவில், நகர எல்லையான கொல்லன் பட்டறை பகுதியில், அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், நகரச்செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் ரோடு வழியாக சென்று, நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள தனியாருக்குசொந்தமான ஓய்வு இல்லத்திற்கு சென்றார்.
உடுமலை நேதாஜி மைதானத்தில், இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.