/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்
ADDED : அக் 02, 2025 11:06 PM

கோவை:முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் பல்வேறு மாவட்ட அணியினர் திறமையை வெளிப்படுத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை, 2025 விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கி, 14ம் தேதி வரை, 13 நாட்கள் நடைபெறுகிறது. கோவை வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நேற்று மாலை துவங்கின.
கோவையில் கூடைப்பந்து மற்றும் கோகோ ஆகிய இரு விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கின.மாணவியருக்கான கூடைப்பந்து போட்டியில், மதுரை - காஞ்சிபுரம் இடையேயான போட்டியில், 35 - 44 என்ற புள்ளிக்கணக்கில், காஞ்சிபுரம் அணி வென்றது.மயிலாடுதுறை - விழுப்புரம் அணிகளுக்கான இடையேயான போட்டியில், 62 - 20 என்ற புள்ளிக்கணக்கில், மயிலாடுதுறை அணி வென்றது.திண்டுக்கல் - சிவகங்கை இடையேயான போட்டியில், 68 - 35 என்ற புள்ளிக்கணக்கில், திண்டுக்கல் அணி வென்றது.பெரம்பலுார் - கரூர் இடையேயான போட்டியில், 8 - 73 என்ற புள்ளிக்கணக்கில் கரூர் அணி வென்றது.மாணவர்களுக்கான போட்டியில், விருதுநகர் - கள்ளக்குறிச்சி இடையேயான போட்டியில், 103 - 28 என்ற புள்ளிக்கணக்கில் விருதுநகர் அணி வென்றது.தென்காசி - மதுரை அணிகளுக்கு இடையேயான போட்டியில், 26 - 97 என்ற புள்ளிக்கணக்கில் மதுரை அணி வென்றது.த ர் மபுரி - திருநெல்வேலி அணிகளுக்கு இடையேயான போட்டியில், 43 - 79 என்ற புள்ளிக்கணக்கில் திருநெல்வேலி வென்றது.அரியலுார் - காஞ்சிபுரம் அணிகளுக்கான போட்டியில், 40 - 71 என்ற புள்ளிக்கணக்கில் காஞ்சிபுரம் அணி வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.