/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
22 இடங்களில் முதல்வர் மருந்தகம் மத்திய கூட்டுறவு வங்கி நடவடிக்கை
/
22 இடங்களில் முதல்வர் மருந்தகம் மத்திய கூட்டுறவு வங்கி நடவடிக்கை
22 இடங்களில் முதல்வர் மருந்தகம் மத்திய கூட்டுறவு வங்கி நடவடிக்கை
22 இடங்களில் முதல்வர் மருந்தகம் மத்திய கூட்டுறவு வங்கி நடவடிக்கை
ADDED : நவ 23, 2024 11:24 PM
கோவை: மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 22 இடங்களில் முதல்வர் மருந்தகம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின், மாவட்ட அளவிலான விழா நடந்தது. இதில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் ராமகிருஷ்ணன், கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் விபரம் குறித்து கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 137 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நான்கு நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என, மொத்தம் 141 கூட்டுறவு சங்கங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன.
விவசாய உறுப்பினர்களுக்காக, 'கோவை வேளாண் கூட்டுறவு அமைப்பு' என்ற 'வாட்ஸ்-ஆப்' குழு துவங்கப்பட்டுள்ளது. அதில், விவசாய சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களின் கோரிக்கை மற்றும் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படுகிறது.
அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 15 பண்ணை பசுமை காய்கறி விற்பனையகம் துவங்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை, எட்டு விற்பனையகங்கள் துவங்கி செயல்பட்டு வருகின்றன. அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 15 மளிகை பொருட்கள் சில்லறை விற்பனையகம் துவங்க, இடம் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை, 10 மளிகை பொருட்கள் சில்லறை விற்பனையகம் துவங்கி செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 22 இடங்களில் முதல்வர் மருந்தகம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.