/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படை பராமரிப்பு பிரிவு தலைமை தளபதி சூலுாரில் ஆய்வு
/
விமானப்படை பராமரிப்பு பிரிவு தலைமை தளபதி சூலுாரில் ஆய்வு
விமானப்படை பராமரிப்பு பிரிவு தலைமை தளபதி சூலுாரில் ஆய்வு
விமானப்படை பராமரிப்பு பிரிவு தலைமை தளபதி சூலுாரில் ஆய்வு
ADDED : பிப் 08, 2024 06:47 AM

கோவை : இந்திய விமானப்படையின் பராமரிப்பு பிரிவு தலைமை தளபதி, சூலுார் விமானப்படை தளத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய விமானப்படையின் பராமரிப்புப் பிரிவின் தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் விபாஸ் பாண்டே இருந்து வருகிறார். இரண்டு நாள் ஆய்வுக்காக சூலூர், 5 பி.ஆர்.டி., விமானப்படை நிலையத்திற்கு கடந்த, 5ம் தேதி வந்தார்.
நேற்று முன்தினம், நேற்று விமானப்படையில், உள்நாட்டு மயமாக்கல், சாதனைகளை மதிப்பிடு செய்தார். விமானப்படை குடும்ப நல(பிராந்திய) சங்கத்தின் (பிராந்திய) தலைவர் ருசிரா பாண்டே உடன் இருந்தார்.
பல்வேறு உற்பத்தி பிரிவுகள், ஆய்வகங்கள், தொழில்துறை வசதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணிமனையின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டார்.
வெளிநாட்டு உற்பத்தியாளர்களை சார்ந்திருப்பதை தவிர்க்க, 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' முன் முயற்சிகளின் கீழ், பணிமனை மேற்கொண்ட பல்வேறு உள்நாட்டு முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டது.
கொடிசியா பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின்(சி.டி.ஐ.ஐ.சி.,) அதிகாரிகளுடனும், கூட்டம் நடத்தினார். சி.டி. ஐ.ஐ.சி., தலைமை நிர்வாக அலுவலர் வினோத்குமார், பல்வேறு திட்டங்களை, ஏர் மார்ஷலுக்கு விளக்கினார்.

