/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலி
/
தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலி
ADDED : ஏப் 07, 2025 05:36 AM
கோவை; தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் இ.புதுக்கோட்டையை சேர்ந்த தம்பதி, தினேஷ் குமார், 32, பிரியங்கா, 29. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தினேஷ்குமார் தற்போது குடும்பத்துடன் கோவை வடவள்ளி அண்ணாநகரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வடவள்ளி சி.எஸ்.நகர், கண்ணப்ப கவுண்டர் தோட்டத்தில், உள்ள வீட்டில் உறவினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது.
பிரியங்கா தனது மூன்று குழந்தைகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குழந்தைகள் அனைவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். பிரியங்காவின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆதி லிங்கேஸ்வரன் தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஆதிலிங்கேஸ்வரன் தவறி விழுந்தான்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் தேடிய பிரியங்கா குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகிலிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரியங்கா அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.