தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிலைக்கல் விழுந்து குழந்தை மரணம்

 நிலைக்கல் விழுந்து குழந்தை மரணம்

 நிலைக்கல் விழுந்து குழந்தை மரணம்


ADDED : மார் 02, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: குப்பனூர் அருகேயுள்ள செல்லப்பகவுண்டன்புதூர், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு, 35. இவரது நான்கு வயது மகன் சாத்விக்; யு.கே.ஜி. படித்து வந்தான். நேற்று முன் தினம் பிரபு குடும்பத்துடன் ஒத்தக்கால்மண்டபம், மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார்.

இரவு 7:30 மணியளவில் சாத்விக் வீட்டின் வெளியே காம்பவுண்ட் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த, சிமென்ட் நிலைக்கல்லை பிடித்து, தொங்கி விளையாடினான்.

எதிர்பாராதவிதமாக நிலைக்கல் சாத்விக்கின் மீது விழுந்ததில் படுகாயமடைந்தான். அருகேயிருந்தோர் சாத்விக்கை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us