ADDED : ஜூன் 05, 2026 03:19 AM
அ நிறம் | அளவு
அன்னுார்: கோவை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை சேர்ந்த ஆய்வாளர் சரத்குமார் தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் குப்பேபாளையத்தில், ஒரு தனியார் ரப்பர் கம்பெனியில் ஆய்வு செய்தனர்.
ஒடிசாவை சேர்ந்த 13, 15 வயது சிறுவர்கள் இருவர் பணிபுரிந்து வந்தது கண்டறிந்து மீட்டனர்.
புகாரின் பேரில், அன்னுார் போலீசார், அந்த நிறுவன உரிமையாளர் தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
