/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவனுக்கு அடி காப்பகம் மூடல்
/
சிறுவனுக்கு அடி காப்பகம் மூடல்
ADDED : செப் 27, 2025 01:23 AM

அன்னுார்: கோவை கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 58. மனைவி நிர்மலா. இவர்கள் இருவரும் கோட்டைபாளையத்தில், 'கிரேசி ஹேப்பி ஹோம்ஸ்' என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை, 12 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதில், ஒன்பது சிறுவர்கள் தங்கி படித்து வந்தனர்.
ஒரு சிறுவனை செல்வராஜ் பெல்ட்டால் சரமாரியாக தாக்கினார். செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் ஆதரவற்றோர் இல்லத்தை ஆய்வு செய்தனர். போதுமான வசதிகள் இல்லாததை கண்டறிந்து, அரசு அளித்த அங்கீகாரத்தை ரத்து செய்து இல்லத்தை மூட பரிந்துரைத்தனர்.
அங்கு வசித்த 9 சிறுவர்களில் நான்கு பேரை அன்னுாருக்கும், மூன்று பேரை மேட்டுப்பாளையத்துக்கும், இருவரை உறவினர்களிடமும் ஒப்படைத்தனர்.