/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபாய நிலையில் அங்கன்வாடி மையம் அச்சத்தில் குழந்தைகள், பெற்றோர்
/
அபாய நிலையில் அங்கன்வாடி மையம் அச்சத்தில் குழந்தைகள், பெற்றோர்
அபாய நிலையில் அங்கன்வாடி மையம் அச்சத்தில் குழந்தைகள், பெற்றோர்
அபாய நிலையில் அங்கன்வாடி மையம் அச்சத்தில் குழந்தைகள், பெற்றோர்
ADDED : டிச 23, 2024 03:54 AM
அன்னுார் : குமாரபாளையம் அங்கன்வாடி மைய கட்டடம் அபாய நிலையில் உள்ளது.
அன்னூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட குமாரபாளையத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான, 45 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும், என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கவுன்சிலர் அங்காத்தாள் கூறுகையில், ''பேரூராட்சி அலுவலகத்தில், இது குறித்து புகார் தெரிவித்தால், கட்டடம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது என்று கூறுகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெரிவித்தால், கட்டடம் பேரூராட்சியை சேர்ந்தது என்கின்றனர். இரண்டு நிர்வாகங்களும் பொறுப்பை தட்டிக் கழிப்பதால், அபாய நிலையில் உள்ள கட்டடத்தில் விபரீதம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. மோசமான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்ற வேண்டும்,'' என்றார்.