/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கால்பந்து போட்டி: களம் காணும் சிறுவர்கள்
/
மாவட்ட கால்பந்து போட்டி: களம் காணும் சிறுவர்கள்
ADDED : நவ 13, 2025 09:42 PM
கோவை: பாலர்ஸ் புட்பால் கிளப் சார்பில், வரும் 29,30ம் தேதிகளில் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்படுகிறது.
கிளப் சார்பில், சின்னியம்பாளையம் வெங்கிட்டாபுரம், டெக்கத்லான் பிராட்வே மால் ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில், நான்கு வயது முதல் 16 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, மாவட்ட அளவிலான, ஐவர் கால்பந்து போட்டி, வரும் 29, 30ம் தேதிகளில், டெக்கத்லான் பிராட்வே மால் பகுதியில் உள்ள மைதானத்தில் நடத்தப்படுகிறது.
மாணவ, மாணவியர் என இருபாலருக்கும், 8, 10, 12, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடத்தப்படுகிறது. முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு கோப்பை வழங்கப்படுகிறது.விபரங்களுக்கு: 87605 75825.

