/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்; பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
/
பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்; பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்; பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்; பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : நவ 14, 2024 08:38 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
* நெகமம் அருகே, சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரிக் பள்ளியில், குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் தீபா தலைமையில் மாணவர்கள் அனைவரும் ஜவஹர்லால் நேரு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கணித ஆசிரியர் தமிழ்வாணி ஜவஹர்லால் நேரு பற்றியும், சுதந்திர இந்தியாவில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பற்றியும் பேசினார். ஆசிரியர்கள் சுமதி மற்றும் மஞ்சுளா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.
*பக்கோதிபாளையம் தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் வரவேற்றார். மாணவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் நேரு வேடம் மற்றும் தேச தலைவர்கள் வேடமணிந்தனர். பேச்சு, பாடல் போட்டிகள் நடைபெற்றன. உதவியாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
* புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் சித்ரா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாண்டியம்மாள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், போதை விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது.
* நெ.,10 முத்தூர் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் நர்மதா, ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு விளையாட்டு, நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.
* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமையில் நடந்த விழாவில், மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின், மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* உடுமலை பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் 'கேக்'வெட்டி, குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.
* உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி முதல்வர் சகுந்தலா குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை துவக்கி வைத்தார். மாணவர்களின் வரவேற்பு நடனம், சிலம்பம், குழுப்பாடல், மவுனமொழி நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், நிர்வாகத்தினர், ஆசிரியர்கள். மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
* கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகள் சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென தமிழாசிரியர் கருப்பாத்தாள் பேசினார். பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மாணவர்களை ஊக்குவித்து பேசினார். தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
* உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், மாணவர்கள் நேருவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
ஆர்.கே.ஆர்., கல்வி குழும தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா மாணவர்களுக்கு வாழ்த்து கூறினர்.