/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய வட்டத்தின் சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
/
இலக்கிய வட்டத்தின் சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
இலக்கிய வட்டத்தின் சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
இலக்கிய வட்டத்தின் சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
ADDED : நவ 21, 2025 06:13 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நவம்பர் மாத இலக்கிய நிகழ்வாக, குழந்தைகள் தின விழா லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் அம்சப்ரியா தலைமை வகித்து, சிறார் இலக்கியம் ஓர் அறிமுகம் குறித்து விளக்கியதுடன், சிறார்களின் பிரச்னைகள், சிறார்களைப் புரிந்து கொள்வது, சிறார்களின் மன இயல்புகள் என விளக்கினார். அமைப்பின் செயலளார் பூபாலன் முன்னிலை வகித்தார்.
எழுத்தாளர் ஈரோடு சர்மிளா எழுதிய துணிச்சல்காரி என்னும் இளையோர் நாவலை முனைவர் நான்சி கோமகன் அறிமுகப்படுத்தினார். இளம் சிறார்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்த நுால் பாடத்திட்டமாக வைக்கப்பட வேண்டிய அளவு, தரமானதாக உள்ளதாக எடுத்துரைத்தார்.
எழுத்தாளர் உமையவன் எழுதிய மந்திரச் செருப்பு என்னும் இளையோர் குறுநாவலை அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் வாசிப்பு மையப் பொறுப்பாளர் ஹரிப்பிரியா அறிமுகப்படுத்தினார்.
பொள்ளாச்சியை சேர்ந்த தங்கராசன் பற்றிய நினைவுகளை, அவரது மகள் சித்ராதேவி பகிர்ந்து கொண்டார்.பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மைய வாசிப்பு மைய சிறார்களுக்கும் நுால்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இளம் படைப்பாளிகள் பங்கேற்ற கவியரங்கம் நடந்தது. கவிஞர் சோலைமாயவன் நன்றி கூறினார்.

