/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா; கலைநிகழ்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா; கலைநிகழ்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா; கலைநிகழ்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா; கலைநிகழ்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : நவ 15, 2024 09:30 PM

-- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில், குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
* பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி தாளாளர் மாரிமுத்து, செயலர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
*கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் மனிதநேயம், குழந்தைகள் மீது அவரது பற்று குறித்து விளக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு வண்ண பூந்தொட்டிகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் சத்யா பங்கேற்றனர்.
*போடிபாளையம் நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தில், பசுமை குரல் அமைப்பு சார்பில் மாணவியருக்கு விதை பந்து பென்சில் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் ரபேல்ராஜ், ஆசிரியர் கனகலட்சுமி, பசுமை குரல் அறங்காவலர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
*ரமணமுதலிபுதுார் துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் அழகேஸ்வரி தலைமை வகித்து, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பற்றியும், குழந்தைகள் மீதான அவரது அன்பு பற்றியும் பேசினார். நேருவின் வாழ்க்கை வரலாற்றை, குழந்தைகள் பாடல், கவிதை வாசித்து வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கு வினாடி-வினா நடத்தப்பட்டது.
* கொல்லப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சற்குணவதி தலைமையில் விழா நடந்தது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சார்பாக மாணவர்களுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு
* கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில், மகிழ் முற்றம் என்ற தமிழக அரசின் திட்டமும் துவங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரின் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது. குழந்தை பாதுகாப்பு, உரிமை, குழந்தை திருமணம் போன்றவை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்சிகள் நடந்தது.
வால்பாறை
* வால்பாறை, வில்லோனி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் ஜோஸ்பிரபாகர் ராஜன் தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* உருளிக்கல் துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர்(பொ) வசந்தகுமார் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் முருகேஸ்வரி, ஆசிரியர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி, கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
* ஈட்டியார் துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியை மாரியம்மாள் தலைமை வகித்தார். மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
உடுமலை
*சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் இன்பகனி, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் தீபா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா முன்னிலை வகித்தனர். போட்டிகள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகிழ்முற்றம் மாணவர் குழு கட்டமைப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் (பொ) சரவணன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் சுபத்ரா வரவேற்றார். குழுவின் பொறுப்பாசிரியர் ராதா, மகிழ் முற்றம் குழுவின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். மாணவர்களுக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் மலர்கண்ணு நன்றி தெரிவித்தார்.
*ஆ.அம்மாபட்டி துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கரேஸ்வரி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.
* ராகல்பாவி துவக்கப்பள்ளியில் மகிழ் முற்றம் துவக்க விழா நடந்தது. மகிழ்முற்றம் குழு குறித்து ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். பள்ளி மேலாண்மைக்குழு துணை தலைவர் பிரியா தலைமை வகித்தார். மாணவர்களுக்கு ஓட்டபந்தயம், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. உடுமலை ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஊராட்சி நிர்வாக செயலாளர் சேகர், உடுமலை தமிழிசை சங்க உறுப்பினர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பிரியங்கா நன்றி தெரிவித்தார்.
* உடுமலை எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்த்துமடல் வாசிக்கப்பட்டது. நேருவின் வரலாறு குறித்து ஆசிரியர் சிவக்குமார் பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.
* உடுமலை, ஆண்டியகவுண்டனுார் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மகிழ் முற்றம் துவக்கப்பட்டது. இதில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை குழுக்களுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.