ADDED : நவ 24, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், சிறார் இலக்கியக் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. அமைப்பு தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார்.
தொடர்ந்து, எழுத்தாளர் சிப்பி மலையாளத்தில் எழுதி, பேராசிரியர் சிவமணி மொழிபெயர்த்த 'மந்திரமயில்' சிறார் சிறுகதை புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை எழுத்தாளர் ரவிவாமனன் வெளியிட, விதை அமைப்பு பொறுப்பாளர் ஜானகிப்பிரியா பெற்றுக் கொண்டார்.
எழுத்தாளர் பாலமுருகன் எழுதிய 'பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு' என்ற சிறார் புத்தகத்தை ஆசிரியர் பாபு; செல்வஸ்ரீராம், மதிவதனி இணைந்து எழுதிய 'என்ன சொன்னது லுாசியானா' என்ற கதை தொகுப்பை கவிஞர் ஜெயக்குமார்; யோகேஸ்வரன் எழுதிய 'கஜராஜன் கலீம் தாத்தா' புத்தகத்தை கவிஞர் லீலா அறிமுகப்படுத்தினார்.