/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படகு இல்ல வளாகத்தில் சிறுவர் பூங்கா அமைப்பு
/
படகு இல்ல வளாகத்தில் சிறுவர் பூங்கா அமைப்பு
ADDED : டிச 22, 2025 05:20 AM

வால்பாறை: வால்பாறை படகு இல்லம் வளாகத்தில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்க சிறுவர் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.
கோவை மாவட்டம் எல்லையில் வால்பாறை சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நகரங்களிலிருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களுக்கு சென்று, மகிழ்கின்றனர்.
அங்கு வால்பாறை நகராட்சி சார்பில், சுற்றுலா பயணியர் பொழுதுபோக்கு வசதிக்காக பஸ் ஸ்டாண்ட் அருகே படகு இல்லமும், காமராஜ்நகர் பகுதியில் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
படகு இல்லம் துார்வாரும் பணி நிறைவடைந்த நிலையில், விரைவில் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்படவுள்ளது.
இதனிடையே படகு இல்லம் அமைந்துள்ள பகுதியில், குழந்தைகளை மகிழ்விக்க நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தற்போது நடக்கிறது.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதே போல் படகு இல்லம் அமைந்துள்ள வளாகத்தில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி, 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடக்கிறது.
இதே போல், 1.84 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த வசதியாக அண்ணாதிடல் இடிக்கப்பட்டு, அங்கு 'பார்க்கிங்' வசதிக்காக தளம் அமைக்கும் பணியும் நடக்கிறது. மூன்று மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடைந்து சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்,' என்றனர்.

