sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சித்திரைச்சாவடி தடுப்பணையை உடனே துார்வார வேண்டும் : 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

/

சித்திரைச்சாவடி தடுப்பணையை உடனே துார்வார வேண்டும் : 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

சித்திரைச்சாவடி தடுப்பணையை உடனே துார்வார வேண்டும் : 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

சித்திரைச்சாவடி தடுப்பணையை உடனே துார்வார வேண்டும் : 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்


UPDATED : பிப் 21, 2026 05:04 AM

ADDED : பிப் 21, 2026 05:03 AM

Google News

UPDATED : பிப் 21, 2026 05:04 AM ADDED : பிப் 21, 2026 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வாரி, நீரை சேமித்தால், 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் என்பதால், மழைகாலத்துக்கு முன் தடுப்பணையை தூர்வார வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையை அரணாக கொண்டு, தொண்டாமுத்தூர் வட்டாரப்பகுதி உள்ளது. இந்த பகுதியில்தான் நொய்யல் உருவெடுக்கிறது. நொய்யல் ஆறு இதன் கிளை வாய்க்கால்கள் மற்றும் மலையிலிருந்து வரும் பள்ளவாரி ஓடைகளை ஆதாரமாக கொண்டு, ஏராளமான குளங்கள் மற்றும் குட்டைகள் உள்ளன.

இந்தப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி மூலம் சுற்றியுள்ள, விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.



சித்திரைச்சாவடி தடுப்பணையை பல ஆண்டுகளாக தூர்வாராததால், மணல் திட்டுக்கள் உருவாகி, நீர் வழிப்பாதை குறுகியுள்ளது. இதனால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் நீரை தேக்கி வைக்க முடிவதில்லை.

சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், நொய்யல் ஆறு தூர்வாரப்பட்டது; ஆனால், தடுப்பணையை தூர்வாரவில்லை.

தற்போது, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. மழை துவங்குவதற்குள் தடுப்பணையை தூர்வார, பொதுப்பணித்துறையினர் முன்வர வேண்டும். துார்வாரினால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சித்திரைச்சாவடி தடுப்பணையை, தனியார் அமைப்புடன் சேர்ந்து தூர்வார ஏற்பாடு நடக்கிறது. விரைவில் பணி துவங்கும்' என்றனர்.

மழை துவங்கும் முன் பணி துவங்க வேண்டும் என்பதே, இப்பகுதி விவசாயிகளின் வேண்டுகோள்.






      Dinamalar
      Follow us