/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் சித்திரை திருவிழா கோலாகலம்
/
கோவில்களில் சித்திரை திருவிழா கோலாகலம்
ADDED : மே 05, 2025 10:40 PM

வால்பாறை; வால்பாறையில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி (மின்பாறை), சக்திமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம் மரப்பாலம் கீழ்பூனாஞ்சி அம்மன் கோவிலிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு வள்ளிக்கும்மியாட்டம் நடந்தது.
நாளை (7ம் தேதி) காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
*ரொட்டிக்கடை பாறைமேடு, பாரளை எஸ்டேட் கணபதி, மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், பட்டத்தரசி, நாகம்மாள், கன்னிமார் திருக்கோவில், 101ம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று முன்தினம் காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
வரும், 8ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 9ம் தேதி இரவு, 10:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்து வரப்படுகிறது. 10ம் தேதி மாலை 3:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.
* சின்கோனா (டான்டீ) 7ம் டிவிஷன் சக்திமாரியம்மன் கோவிலின், 59ம் ஆண்டு திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்து வரப்படுகிறது. 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தும், அலகு பூட்டியும் கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர்.
வரும், 11ம் தேதி காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.