தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ கடவுள் பேரை சொல்லி கேக்கறாங்க ஓசி விஜய் வந்ததால காத்திருக்காங்க 'டிசி'

 கடவுள் பேரை சொல்லி கேக்கறாங்க ஓசி விஜய் வந்ததால காத்திருக்காங்க 'டிசி'

 கடவுள் பேரை சொல்லி கேக்கறாங்க ஓசி விஜய் வந்ததால காத்திருக்காங்க 'டிசி'


UPDATED : ஆக 25, 2026 08:15 AM

ADDED : ஆக 24, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2026 08:15 AM ADDED : ஆக 24, 2026 08:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பேக்கரியில் சித்ராவும் மித்ராவும் டீ, பப்ஸ் ருசித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

விநாயகர் சதுர்த்தி வருதே...ஏதாவது விசேஷம் இருக்கா?

கடவுள் பேர சொல்லி கலெக்சன் அமோகம். சில பேருக்கு போலீஸ் பாதுகாப்பு குடுத்திருக்கு. இவங்க கடைகளில் வசூலுக்கு போகும் போது, துப்பாக்கியோட போலீசும் போறதால கடைக்காரங்க, கஸ்டமர்ஸ்-க்கு சங்கடம். வேற நிர்வாகிகளை அனுப்பலாமேனு பலரும் வருத்தப்படுறாங்க.

அதுக்காக மாசக்கணக்கா லீடு எடுப்பாங்களா?

அது யாரு?

போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல ஒரு டிசி மேடம் சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்க முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க. வீட்டுக்காரர் தி.மு.க.வுல முக்கிய பதவில இருக்றதால ஈசியா டிரான்ஸ்பர் வந்துரும்னு இருந்தாங்க. அதுக்குள்ள ஆட்சி மாறிருச்சு. டிரான்ஸ்பர் வரல. டூட்டில ஜாயின் பண்ண மனசும் வரல.. ஆள் குறைவா இருக்கற நெலமைல, இவர் லாங் லீவுல இருக்க எப்டி அனுமதி தராங்கனு மத்த அதிகாரிங்க கடுப்புல இருக்காங்க.

சூலுார்ல தவெககாரங்க நீயா, நானான்னு மல்லுக் கட்றாங்க. எந்த கோஷ்டிக்கு போறதுன்னு தொண்டர்கள் முழிக்கிறாங்க.

கோவை மண்டலத்துல எல்லா கட்சிலயும் இது சகஜமா நடக்றதுதான. 100 நாள் சாதனை மீட்டிங்கையும் தனித்தனியா நடத்துனாங்க, இல்ல?

ஆமா... நம்ம ஊர் மினிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் மீடியா காரங்களுக்கு கவர் குடுக்கறாங்கனு பேசினோமே... அதுல ஒருத்தர் இப்ப கவர் குடுக்றத நிறுத்திட்டாராம். வடக்கு காரர் தான், மீடியாவ எப்டி பகைச்சுக்றதுனு தவிக்கிறாராம். கவர் கண்றாவி தொடருது.

இந்த கவர் பார்ட்டிங்க தான் அரசு ஊழியர் லஞ்ச வழக்கில் கைதுனு நியூஸ் போட ஓடுவாங்க. சரி விடு. அமைச்சர் அடக்கமா இருந்தாலும், பி.ஏ.க்கள் விடுவாங்களா, தெரியல. எங்க ஆட்களுக்கு பஞ்சாயத்து வேலை குடுங்கன்னு வட்டார வளர்ச்சி அலுவலரை ஒரு பி.ஏ போன்ல கூப்ட்டு சொல்லியிருக்காரு. ரூரல் வடக்குல ரெண்டு ஊராட்சிகள்ல கட்சிக்காரங்களுக்கு குடிநீர் பராமரிப்பு வேலை குடுத்ருக்காங்க.

போன ஆட்சில கார்ப்பரேஷன்ல 'எமர்ஜென்சி ஒர்க்'ங்கிற பேர்ல வாய்மொழி உத்தரவுல ஏகப்பட்ட வேலை நடந்திருக்கு. அதுக்கு கன்டிஜென்சி பில் ரெடி பண்ணிருக்காங்க. அப்டி வேலை செஞ்ச ரெண்டெழுத்து கம்பெனிங்க குடுத்த பில்களை 'ஓகே' பண்ணாம லேடி ஆபீசர் நிறுத்தி வச்சிருக்காராம். அவர எப்படி சரிக்கட்றதுனு தெரியாம கான்ட்ராக்டர்ஸ் முழி பிதுங்கிட்டு இருக்காங்க..

நாப்பதாயிரம் வாங்கி பிடிபட்ட லேடி பில் கலெக்டர் பின்னணி என்னவாம்?

பெரிய ஆபீசருக்கும் கட்டிங் குடுக்கணும்; அப்பதான் பைல் மூவ் ஆகும்னு சொன்னாங்களாம். அதான் பத்திகிச்சுன்னு சொல்றாங்க. லஞ்ச ஒழிப்பு துறை எப்ஐஆர்ல இது பதிவாயிருக்கு. அந்த அதிகாரி யார்ங்கறதுதான் இப்ப மாநகராட்சில டாப் கிசுகிசு.

பழைய 2 ஆட்சியிலயும் வசூல் வேட்டை நடத்தி புகார் வந்து 2 தடவ டிரான்ஸ்பர் ஆன இன்ஜினியர், மறுபடியும் இங்கயே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டாராம். இதெல்லாம் ஓப்பனா தெரிஞ்சும் இன்னும் அவருக்கு கூடுதல் பொறுப்பு குடுத்து என்கரேஜ் பண்றது தான் எங்கயோ இடிக்குது.

இதே மாதிரி பொது பிரிவுல பல புகார்கள்ல சிக்குன ராஜாவ மேற்குக்கு மாத்தி ஒரு மாசம் ஆகுது. அவர் மெயின் ஆபீச விட்டு நகர மாட்டேங்றார். ஆனா, டிசி கூப்பிட்டு வார்ன் பண்ணி அனுப்பிருக்காரு.

கோர்ட் ஆர்டர்படி நீக்கப்பட்ட 54 பேர்ல சிலர் இப்பவும் ஆபீசுக்கு வர்றாங்க. ஹெல்த், ஜே.என்.என்.யு.ஆர்.எம். செக்சன்ல உட்கார்றாங்க. பெண்டிங் வேலைய முடிச்சுட்டு போங்கன்னு சொன்னதால வர்றாங்களாம். இதுல சிலபேருக்கு கான்டிராக்டர்ஸ் கிட்ட பேசி அவுட்சோர்சிங் வேலை வாங்கி தராங்களாம் சில ஆபீசர்ஸ்.

நன்றி மறக்றது தப்பில்லையா.. இந்த மாசம் கவுன்சில் கூட்டம் நடக்காதாமே?

ரெண்டு கூட்டத்ல ரகளை ஆச்சு. மறுபடியும் நடக்காம தவிர்க்கதான் கூட்டம் ரத்தாம்.

ஆர்.எஸ்.புரம் ஆவின்ல ஆடிட் நடந்துச்சு. ஒரு அதிகாரி பேரு அடிபடுதாம். அவர் பச்சாபாளையத்துல டூட்டி பார்த்தப்ப டெண்டர் பாலோ பண்ணாம, கொட்டேஷன் அடிப்படையில ஒரே கடைல பொருட்கள் வாங்கி பிரச்னைல சிக்குனவரு.

அனுபவசாலிதான் போல.

காமெடி என்னன்னா, ஆடிட் ரிப்போர்ட்ட நிராகரிக்க அதிகாரம் படைத்த குழுவில் அவரும் மெம்பராம்!

காமெடியா டிராஜடியானு ஜனங்க முடிவு செஞ்சுகிட்டும் என்றபடி சித்ரா எழுந்தார். மித்ராவும் உடன் நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us