/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 23, 2024 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோபாலபுரம் முத்துசாமிகவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் (எம்.எம்.எஸ்.,) பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கிரிஜா தலைமை, பள்ளிப் பொருளாளர் பிரியவீணா முன்னிலை வகித்தார்.
விழாவில், வண்ண விளக்குகளால் குடில் அமைத்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கேக் வெட்டி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.