/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் வழிபாடு
/
புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் வழிபாடு
ADDED : ஜன 02, 2026 05:50 AM

பொள்ளாச்சி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், திருப்பலி நடந்தது.
பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு புனித லுார்து அன்னை ஆலயத்தில்ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு திருப்பலி நடந்தது.
புனித லுார்து அன்னை ஆலயத்தில், பங்கு தந்தை ரெவெரன்ட்பாதர் லாரன்ஸ் அடிகளார் மற்றும் அருட்சகோதரர் அஜிட்டோ சேவியர் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு ஆசி வழங்கினர்.
ஆலயத்தில், இயேசு பாலன் பாடகர் குழுவினர், பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் இணைந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு பாடல்களை பாடினர்.
இந்த சிறப்பு ஆராதனை வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்களும், மற்ற மதத்தினரும் புத்தாண்டு சிறப்பு ஆராதனை வழிபாட்டில் பங்கேற்று, இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
*கிணத்துக்கடவு டி.இ.எல்.சி., சர்ச்சில், சபை குரு சார்லஸ் தேவனேசன் தலைமையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு பிரார்த்தனைகள் செய்து, பாடல்கள் பாடினர்.
நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், நள்ளிரவு 12:00 மணிக்கு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி ஒருவருக்கு ஒருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
*வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயம், ஆர்.சி.,சர்ச், சென்லுக் சர்ச், ரொட்டிக்டை புனித வனத்துசின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்துவ ஆலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமாய் காட்சியளித்தன.
நேற்று முன்தினம் இரவு வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் ஆனைமலை மறைமாவட்ட தலைவர் சார்லிபன் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை, ஜெபக்கூட்டம் நடந்தது. இதே போல் வால்பாறை துாயஇருதய தேவாலயத்தில், ஆலய பங்குதந்தை ஜெகன்ஆண்டனி தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும், கூட்டுப்பாடற்திருப்பலியும் நடைபெற்றது.
வால்பாறை கோ-ஆப்ரெடிவ் காலனி சென்லுக் சர்ச் ஆலயபங்கு தந்தை ஜோசப்புத்துார் தலைமையில், திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது. புத்தாண்டு தினத்தையொட்டி நடந்த சிறப்பு ஜெபவழிபாட்டில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

